பிறக்கும்போது
எனக்கு எந்த அடையாளமும் இல்லை.
பின்னாளில்
நீ இன்ன மதம்
என்று சொல்லி வளர்த்தனர்
நீ இன்ன சாதி என்று
சொல்லிக் கொடுத்தனர்
உன் கடவுள் எல்லாம் வல்லவர்
அவரையே வணங்கு என்றனர்
நம் இனம் தமிழ் இனம் என்று
பின் ஒரு நாள் கூறினர்.
நாமெல்லாம் இந்த கட்சி என்று
வேறு ஒரு நாள் கூறினர்
நம் தலைவர் இவர்தான் என்று
உறுதி கொள்ள சொல்லினர்
சிரித்து நழுவினேன்
பிடி கொடுக்க மறுத்தேன்
கேள்விகள் கேட்டேன்
சிலர் ஏத்தியிஸ்டா என்றனர்
சிலர்
பெரியாரிஸ்ட்டா என்றனர்
சிலர்
கம்யூனிஸ்ட்டா என்றனர்
சிலர் வெறும் வேஸ்டு என்றனர்.
நான் வெறும் சைக்கிளிஸ்ட் என்று சொல்லி
சைக்கிளில் வீடு திரும்பினேன்
எந்த ‘இசத்திற்குள்ளும்’ சிக்காமல்
மனிதன் என்ற அடையாளத்தோடே
இப்போதும் இருக்கிறேன்
மிச்சமுள்ள மனிதாபிமானத்தோடு.
No comments:
Post a Comment