எல்லோருக்கும் கேட்கிறது
மிருதங்கத்தின் நாதம்
எனக்கு மட்டும் எங்கோ
ஒரு மாடு கதறும் ஓசை
எல்லோருக்கும் கேட்கிறது
புல்லாங்குழழின் கீதம்
எனக்கு மட்டும் எங்கோ
ஒரு மூங்கில் வெட்டி வீழ்த்தப்படும் சப்தம்
எல்லோருக்கும் தெரிகிறது
தீபாராதனையின் ஒளி
எனக்கு மட்டும் எங்கோ
கையேந்தும் குழந்தைகளும் அலட்சியமானஇருளும்
எல்லோருக்கும் தெரிகிறது
அவ்வெற்றியின் குதூகலம்
எனக்கு மட்டும் எங்கோ
மறைக்கப்பட்ட பொய்களும், மிதிக்கப்பட்டநேர்மையும்
தன்னிரக்கம் இப்படித்தான்
சிற்சில வேளைகளில்
அசிங்கமான விஸ்வரூபத்தில்
இயலாமை இப்படித்தான்
பற்பல சமயங்களில்
மயக்கும் மாரீசனாய்
உள்ளத்தின் குமுறல்
மனதின் பூட்டப்பட்ட அறை சுவர்களில்
முட்டி மோதி
எதிரொலித்து பயமுறுத்தும்
அலைபாயும் குரங்கின்
வால் பிடித்துச் சுழற்றி
தரையில் அடிக்க
ஓடுகிறேன் நான்
யாரை சொல்கிறீர்கள்
பைத்தியகாரனென்று?
மிருதங்கத்தின் நாதம்
எனக்கு மட்டும் எங்கோ
ஒரு மாடு கதறும் ஓசை
புல்லாங்குழழின் கீதம்
எனக்கு மட்டும் எங்கோ
ஒரு மூங்கில் வெட்டி வீழ்த்தப்படும் சப்தம்
தீபாராதனையின் ஒளி
எனக்கு மட்டும் எங்கோ
கையேந்தும் குழந்தைகளும் அலட்சியமானஇருளும்
அவ்வெற்றியின் குதூகலம்
எனக்கு மட்டும் எங்கோ
மறைக்கப்பட்ட பொய்களும், மிதிக்கப்பட்டநேர்மையும்
சிற்சில வேளைகளில்
அசிங்கமான விஸ்வரூபத்தில்
பற்பல சமயங்களில்
மயக்கும் மாரீசனாய்
மனதின் பூட்டப்பட்ட அறை சுவர்களில்
முட்டி மோதி
எதிரொலித்து பயமுறுத்தும்
வால் பிடித்துச் சுழற்றி
தரையில் அடிக்க
ஓடுகிறேன் நான்
பைத்தியகாரனென்று?