Search This Blog

Saturday, April 14, 2018



Life's clock keep ticking
It moves so fast that some times
U neither celebrate
Nor mourn
You just keep running with the pace of the clock needle 
For you need to balance not to fall
It's all about running my Son
Till you can.
Till your legs are weak
Till your lungs are empty
The moment u r tired
U start wondering what the hell this running is for
Not to fall ?
You could have just fallen once and walked
Enjoyed that sip of coffee
Enjoyed that autumn showers
Enjoyed that lovely moon nights
Enjoyed the life
The monster in you made you run.
The Monster kept telling all you can and all you can't
The monster in you was leading you
The monster called Fear in you.
ஒரு அர்த்தமற்ற கேள்விக்கும்
ஒரு அறிவார்த்தமான கேள்விக்கும்
வெகு நேரங்களில்
ஒரு ஆழமான மௌனம் 
அற்புதமான பதிலாய் அமைகிறது.


உன் கனவுகள் இல்லா இரவுகளில்
நான் உறங்குவதேயில்லை
உன் நினைவுகள் இல்லா பகல்களில்
நான் விழிப்பதேயில்லை
வெட்டி ஏறிந்தாலும்
மீண்டும் முளைக்கும் மூங்கிலாய்
துளிர்விட்டுக்கொண்டே இருக்கிறது
உனக்கான என் அன்பின் மீதி
துவட்டி முடித்து
தூக்கி எறிந்த துண்டாய்
என் நினைவுகள்
உன் மனதின் ஏதோ ஒரு மூலையில்
குவித்து வைத்த
மணல் கோபுரமாய்
என் மனமெங்கும் நீ
ஒரு ஒற்றை சொல்லில்
கோபுரம் கலைத்தாய்
மணல் மட்டும் பரவிக் கிடக்கிறது
சொடுக்கிய சாட்டை ஒலிக்கு
பயந்து நடக்கிறது.
படு என்றவுடன் படுக்கிறது
நாற்காலி விட்டு நாற்காலி தாவுகிறது.
வளையத்துக்குள் எம்பி குதிக்கிறது
சொன்னபடி செய்தால்
ஒரு கறித்துண்டு கிடைக்கிறது
சிங்கம் செய்த வித்தைகள் கண்டு
கை தட்டி வியக்கிறது சர்கஸ் கூட்டம்
மார் தட்டி நிற்கிறான் மனிதன்.
சுயம் இழந்து
பலம் மறந்து
சிரம் கவிழ்ந்து
கூண்டுக்குள் செல்லும்
சிங்கம் காண்கையில்...
கோபமும் வருத்தமும்
ஒன்றாய் எழுகிறது
வாழும் வாழ்க்கைக்கும்
வாழ நினைக்கும் வாழ்க்கைக்கும்
இடைப்பட்ட வெளியில்
சஞ்சரிகின்றன
ஆசைகள்
நம்பிக்கைகள்
கோபங்கள்
தோல்விகள்
சொல்லாமல் விடப்போகும்
இன்னும் பிற விஷயங்கள்

ஒரு ஊதா நிற பூ


in memory of Asifa - a 8 year old Kashmiri Girl who was brutally raped inside a temple and murdered.   She is the daughter of nomad parents who shepherd goats and horses.  

I SENT THE HORSES BACK HOME
(Posting by unknown and Tamil translation by me)
Maai
I sent the horses trotting,
And they found their way back home.
But, I couldn't.
My legs that you thought were
Swift as those of a deer,
They froze.
Maai, they froze.
But I sent the horses home.
Maai, them monsters,
They had no horns or fangs,
Or deadly long nails.
But they hurt me.
They hurt me bad, Maai.
The purple flowers,
The yellow butterflies,
They stood there helpless.
While I sent the horses back home.
Maai,
Tell Baba that I know,
I know,
I know he tried.
I heard him say out my name,
I heard him repeat it loud.
But,
I was sleepy Maai,
I was tired.
Them monsters,
They hurt me bad.
Strange as it may seem to you,
Maai,
It feels like your warmth now.
It doesn't hurt anymore.
The blood has dried
And it looks like the purple blossoms
That swayed with me in the meadows.
It doesn't hurt, Maai.
Maai,
The monsters are still out there.
And there are stories too.
Don't listen to them Maai,
Gut wrenching and agonizing they are
And a lot you've gone through.
Maai,
Lest I forget,
There's a temple there
Where lives a goddess.
Thank her,
For I think it's she who helped,
The horses find their way back home.
~ Mi
And my Tamil translation.
அம்மா
நம் குதிரைகள் வீடு திரும்பி விட்டன அல்லவா
நான்
அவற்றை விரட்டி திருப்பி விட்டேன்
ஆனால்
என்னால் வீடு திரும்ப முடியவில்லை அம்மா
என் கால்கள் மான் போன்றவை
நான் மின்னலாய் பாய்வேன் என்பாயே அம்மா
என்னால் முடியவில்லை அம்மா
என் கால்கள் உறைந்து போயின.
ஆனால்
நான் நம் குதிரைகளை
வீடு திருப்பி விட்டேன் அம்மா
அம்மா
அவர்களுக்கு
வலிமையான கொம்புகளில்லை
கூரான பற்களில்லை
நீண்ட நகங்களில்லை
ஆனால்
அவர்கள் அரக்கர்கள்
அம்மா
எனக்கு வலிக்கிறது
மிக மோசமாய் வலிக்கிறது
அந்த ஊதா பூக்கள்
அந்த மஞ்சள் பட்டாம்பூச்சிகள்
அந்த நெடிய மரங்கள்
எல்லாமே எனை பார்த்து அழுதன
இயலாமையோடு

அம்மா 
அப்பாவிடம் சொல் 
எனக்கு தெரியும் 
அவர் எனக்காய் நிறைய முயற்சித்தார் என்று.  
என் பெயரை சொல்லி உரக்க கூப்பிட்டார் 
கத்தி கதறினார்.
எனக்கு தெரியும்.  
ஆனால் நான் தூங்கியபடி இருந்தேன் அம்மா
என்னால் முடியவில்லை
இந்த அரக்கர்கள் 
என்னை அவ்வளவு காயப்படுத்தி விட்டார்கள் 


அம்மா 
நான் சொல்வது உனக்கு புதிராய் இருக்கும்
இப்போது நான் 
உன் சுகமான அரவணைப்பில் 
இருப்பது போல் உணர்கிறேன். 
இப்போது எனக்கு வலிகள் இல்லை 
ரத்தம் கூட காய்ந்து  விட்டது 
புல்வெளிகளில் பூத்து குலுங்கும் 
ஊதா மலர்கள் போல் உணர்கிறேன் நான் 
இப்போது 
எனக்கு வலிக்கவில்லை அம்மா 


அந்த அரக்கர்கள்
இன்னும் அங்கேதான் இருக்கிறார்கள்
ஏராளமான கதைகள் உண்டு
அவற்றை கேட்காதே அம்மா
உன்னை ஆத்திரப்பட வைக்கும்
உன்னை அழ வைக்கும்
நீ அழவது எனக்கு பிடிக்கவில்லை அம்மா
அக்கதைகள்
வேண்டாம் உனக்கு
அம்மா
நான் சொல்ல மறந்துவிட்டேன்
அங்கு ஒரு கோயில் இருந்தது
கோயிலுக்குள் ஒரு அழகான தேவியும் இருந்தாள்
அவள்தான்
நம் குதிரைகளுக்கு வீடு திரும்ப வழி காட்டினாள்
அவளுக்கு என் நன்றிகள் அம்மா !
அவளுக்கு என் நன்றிகள் !!

நான் அவர்கள் அல்ல






பிறக்கும்போது
எனக்கு எந்த அடையாளமும் இல்லை.

பின்னாளில்
நீ இன்ன மதம்
என்று சொல்லி வளர்த்தனர்
நீ இன்ன சாதி என்று
சொல்லிக் கொடுத்தனர்
உன் கடவுள் எல்லாம் வல்லவர்
அவரையே வணங்கு என்றனர்
நம் இனம் தமிழ் இனம் என்று
பின் ஒரு நாள் கூறினர்.
நாமெல்லாம் இந்த கட்சி என்று
வேறு ஒரு நாள் கூறினர்
நம் தலைவர் இவர்தான் என்று
உறுதி கொள்ள சொல்லினர்

சிரித்து நழுவினேன்
பிடி கொடுக்க மறுத்தேன்
கேள்விகள் கேட்டேன்
சிலர் ஏத்தியிஸ்டா என்றனர்
சிலர்  பெரியாரிஸ்ட்டா என்றனர்
சிலர்  கம்யூனிஸ்ட்டா என்றனர்
சிலர் வெறும் வேஸ்டு என்றனர்.

நான் வெறும் சைக்கிளிஸ்ட் என்று சொல்லி
சைக்கிளில் வீடு திரும்பினேன்



எந்த இசத்திற்குள்ளும் சிக்காமல்
மனிதன் என்ற அடையாளத்தோடே
இப்போதும் இருக்கிறேன்
மிச்சமுள்ள மனிதாபிமானத்தோடு.







பேனர் படுத்தல்கள்




“ நீ மார்பில் குத்துவதைக் கூட நான் சிரித்தபடி தாங்குவேன்” – இது ஏதோ காதலிக்கு காதலன் எழுதிய கவிதை அல்ல.  அசோக் நகர் அருகில் அண்ணன் விஜய்காந்திற்கு அன்பு தொண்டர் ஒருவர் வைத்த பேனர்.  பொதுவாக பேனரின் சிறப்பம்சம் என்னவென்றால், அதையெல்லாம் பார்த்த உடனே பிடிக்காது.  ஆனால் பார்க்க பார்க்க பத்திக்கிட்டு வரும்.  “பொ....கிட்டு போ  வேண்டியதுதானே” என நீங்கள் கேட்பது புரிகிறது.  எனினும், பேனர் குறித்த எனது ஆர்வம் மிக தீவிரமானது.  தமிழ்நாட்டின் பேனர் கலாச்சாரம் மற்றும் தமிழனின் பேனர் கற்பனைத்திறன் ஆகியவை குறித்து ஒரு PHD செய்யவேண்டிய அளவுக்கு ஒரு ஆர்வக்கோளாறு ஆகிவிட்டது இப்போது.  

தங்கள் தலைவன் / தலைவியை கொண்டாடுவதில் தமிழனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை.  சொம்படிப்பது, ஜல்லி அடிப்பது, ஜால்ரா அடிப்பது என வட்டாரத் தமிழில்  கூறப்படும் இந்த புகழ்ச்சியணி ஹைக்குகள், தலைவன் மற்றும் தலைவியின் பிறந்தநாள் வரும் பொழுது மிக அதிகமாக சுரக்கிறது.  சங்க கால இலக்கியங்களில் இருந்தே கவிஞர்கள் இதை செய்திருந்தாலும், இப்போதுதான் இந்த புகழ் பாடல் உச்ச நிலையை அடைந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். 
 “வாழும் volcano-வே”, coolers அணிந்த கூர்வாளே, எண்ணூர் எரிமலையே, சின்னதாராபுரம் சிறுத்தையே, விருகை விருட்சமே, சிரிக்கும் சிங்கமே, சன் கிளாஸ் அணிந்த Sun-னே  என்று டெரர் சல்யுடேசன் கொடுப்பது பேனர்களில் முக்கியம்.  அரசியல் அரிஸ்டாட்டிலே, ஐநா சபைக்கே  ஐடியா கொடுத்தவரே,  சட்டசபை சாணக்கியரே  என்று இன்டெலிஜென்ட் ஒபெனிங் கொடுப்பது இன்னொரு ரகம்.  அண்ணனின் உண்மை ‘தெண்டர்கள்’,  புரசைவாக்கம் ‘புளியே’, தங்க ‘தலபதியே’ என்று அங்காங்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கும்.  அதெல்லாம் பெரிது பண்ணாமல் சப்ஜெக்டை புரிந்து கொள்வது நமது கடமை.   பேனரின் முடிவில் முடிந்த வரை தங்களை தாங்களே பெருமிதமாய் அடிமைகள், உண்மை விசுவாசிகள், கிளிப்பிள்ளைகள்  என்று போட்டுக்கொள்வது ஒரு நல்ல பண்பாடு. 

கையில் அலைபேசியுடன் சிரிக்கும் தலைவன் முகம் மிக முக்கியம்.  பெரிய மீசை கொண்ட தலைவன் நடந்து வரும் போஸ் என்றால், சற்றே தொடை தெரியும் அளவுக்கு வேட்டியை தூக்கி கட்டி ராஜ்கிரண் மாதிரி ஒரு பில்ட்அப் கொடுக்கலாம்.  வட்டம், மாவட்டம் ஆகியோர் அவரது பதவிக்கேற்ப போட்டோவை மற்றும் பெயரை பெரிதாக்கி போட்டுக் கொள்ளலாம்.  தலைவன் போட்டோவை விட பெரியதானால் பதவி அம்போ.  மீண்டும் டீ ஆற்ற வேண்டியதுதான்.  பரங்கிமலையில் போட்டோ எடுத்து போட்டோஷாப் செய்து பாரிசில் இருப்பது போன்று செட் அப் செய்வது ஒரு நுண் கலை.   மற்றபடி சிங்கம் சிறுத்தை போன்ற பெட் அனிமல்ஸ் மீது அமர்ந்து நம் தலைவர்கள் தரும் போஸ் மிகச்சிறப்பு. 

அடுத்த முறை பேனர் பார்த்தல் கொஞ்சம் வண்டியை ஓரங்கட்டி கவனியுங்கள்.  சிரிக்க சிந்திக்க விஷயம் கிடைக்கும். 



ஒண்ணும் சொல்லரதுக்கிள்ள





மாட்டுக்கறி தின்னா
மலச்சிக்கல் ஆகுமய்யா
ஆடிருக்கு தின்னுமைய்யா
கோழி ரசம் குடிங்கைய்யா
நல்லது சொன்னாக்க
பயபுள்ள கேக்கலையே
அடங்காத புள்ளையத்தான்
அடி ரெண்டு போட்டேன்ய்யா
அதப்போயி பெரிசு பண்ணி
டிவி-ல போட்டாய்ங்க
பாத்த சனம் அத்தனையும்
பாராட்டி போனாய்ங்க


மாதா கோயிலுக்கு
போன பய அத்தனையும்
மாரியாத்தா கோயிலுக்கு
மணி அடிச்ச பயலுவதான்
“மாரியாத்தா மன்னிப்பா
ஓடி வாடா இங்கிட்டு
செஞ்சது செஞ்சுபுட்ட
திரும்பி வாடா தப்பிச்சு”
கொஞ்சமா கண்டிச்சு
இதத்தான்யா நான் சொன்னேன்
ஓடுகாலி கழுதயத்தான்
ஒட்டி வர நான் போனேன்
கூட்டி வருகையில
ஒப்பாரி எதுக்குன்னு
ஏசுறது எதுக்குன்னு
இன்னிவர புரியல்ல

உண்ட வீட்டத்தான்
ரெண்டாக்க பாக்குறது
என்ன நியாயமுன்னு
நான் கேட்டா தப்பாய்யா
எக்கு தப்பா பேசினவன்
அஞ்சாறு பேரானா
நாங்க ஐநூறு பேராவோம்
பேசினவன் நாக்கறுப்போம்
“மூடிட்டு நீ இருந்தா
முழுசாவே நீ இருப்ப”
சொல்லி முடிக்கல நான்
பயத்துல பாதி பேரு
ஊர விட்டு ஓடிட்டான்
சொல்லி மாளாது
எம் பெரும தீராது

ட்விட்டரில திட்டுவாய்ங்க
பேஸ்புக்கில் போடுவாய்ங்க
வேலையத்த பயலுவதான்
வீண் வதந்தி கிளப்புறாய்ங்க
விபச்சாரின்னு வஞ்சாச்சு
கெட்ட வார்த்த சொல்லியாச்சு
மானங்கெட்ட பயலுவைய்யா
மறுபடியும் எழுதறாய்ங்க



ஒத்த சொல்லு அவரு கொடுத்தா
ஒரு நூறு ஒலியாகும்
சொன்னவனுக்கு வலியாகும்
அகிம்சைதான் வழியின்னு
அண்ணல் அவர் சொன்னாரு
அவரு மட்டும் கையசச்சா
உங்க கத கந்தல்தான்

திருப்பி சொல்லுறேன்
நல்லபடி கேட்டுக்கோ
“மூடிட்டு நீ இருந்தா
முழுசாவே நீ இருப்ப
உன் தலைவனும் மோடிதான்
இல்லேன்னா நீ பாடிதான்”