ஆயிரத்து நூற்று எழுபத்தாறு
வெறும் எண் அல்ல
கலைந்த கனவின் அடையாளம்
ஒரு போராளியின் கதறல்
ஒரு உரிமைக் குரலின் ஓலம்
ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் ஒலி
இது மாணவியின் மரணம் அல்ல
ஒரு தலைமுறையின் தற்கொலை
ஒரு கனவின் கருச்சிதைப்பு
கிராமங்களை
தின்று தின்று வளர்ந்த நகரங்கள்
ஒரு இனத்தின் எதிர்காலத்தை
ஒட்டுமொத்தமாய் விழுங்கியது
ஆராய்வதை நிறுத்திவிட்டு
மனிதம் ஏதேனும் மிச்சமிருப்பின்
கொஞ்சமேனும் வருத்தப்படுங்கள்
முடித்தவரை கைகளை பின்னால் கட்டிக்கொள்ளுங்கள்
உங்கள் விரல்களின் ரத்தம்
அருவருப்பாய் இருக்கிறது.
# RIP ANITHA – A DALIT STUDENT WHO SCORED 1176 IN HIGHER
SECONDARY, DAUGTHER OF A DAILY LABOURER, WHO KILLED HERSELF AFTER HER DREAMS OF
BECOMING A DOCTOR WAS THRASHED DUE TO NEET VERDICT
No comments:
Post a Comment