தளபதி வெளிவந்த நாள். நண்பர்களோடு அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி, சட்டை முழுவதும் வேர்வையோடு அமர்ந்து, கொட்டும் மழையில் தலைவர் வரும்போது – உணர்ச்சி
பெருக்கோடு விசில் அடித்து கையில் அள்ளி வந்த காகிதங்களை விசிறி எறிந்து ‘தலைவா’ என அரங்கமே அதிர்ந்தது. நானும்தான். A
phenomenon called RAJINI. நிழலுக்கும் நிஜத்திற்கும் உண்டான வித்தியாசங்கள் புரிய
ஆரம்பித்த பின்னர் கூட , இன்னமும் ரஜினி ஆச்சரியபடுத்ததுகிறார். ஒரு மனிதனுக்கு இவ்வளவு பெரிய ரசிகர்
கூட்டமா. இந்த ரசிகர் கூட்டம் வாக்காளர்
கூட்டமாய் மாறுமா. மாறும் பட்சத்தில், என்ன மாதிரியான ஒரு அரசியல்வாதியாய் இவர்
இருப்பார். ஆட்டோகாரனாக, தொழிலாளியாக, தாதாவாக, போலிசாக, பால் வியாபாரியாக, தொழில் அதிபராக – சினிமாவில் எதுவாக
வேண்டுமானாலும் இவர் வரலாம். மக்கள் இவரை
பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் அரசியல்வாதி
ரஜினியிடம் மக்கள் எதை எதிர்பார்ப்பார்கள்.
எம்.ஜி.ஆர் , என்.டி.ஆர் என ஆரம்பித்து கமல், ரஜினி, விஷால் என அரசியலுக்குள் வர சினிமா என்பது ஒரு
மீடியம் ஆகிவிட்டது. அரசியல்வாதிகளின் வாரிசுகள் – சினிமா நடிகர்கள் இவர்கள்
மட்டுமே சமீப காலத்தில் அரசியலுக்குள் வந்திருக்கிறார்கள் . பொது மக்களின் பிரச்சினை, களப்பணி என்று எந்த வித பின்புலமும் இல்லாமல், சினிமா புகழ் மட்டும் கொண்டு இவர்களால்
அரசியலுக்குள் குதிக்க முடிகிறது.
இவர்களால் மக்களுக்கு ஏதேனும் நன்மை நடந்தால்
மகிழ்ச்சி.
No comments:
Post a Comment