ஓயாமல் என்னுள்
ஒலிக்கும் யாழினை
மீட்டுதல் நீயா
தீராமல் என்னுள்
ஓடும் நதியின்
ஊற்றுக்கண் நீயா
நான் சொல்லாமல்
விட்டுவிட்ட சொற்களின்
சப்தங்கள் நீயா
விடை இல்லாமல்
போகின்ற கேள்விகளின்
பதில்களும் நீயா
நான் எழுதாமல்
தவறவிட்ட கவிதைகளின்
அர்த்தங்கள் நீயா
நில்லாமல் என்னுள்
ஓடும் காலத்தின்
அச்சாணி நீயா...
No comments:
Post a Comment