Search This Blog

Saturday, June 16, 2018

நாளை நமதே


இன்னும் கொஞ்சம்
மதத்தினை ஊற்று.
இல்லை இல்லை
போதாது
இன்னும் கொஞ்சம் ஊற்று.
இனத்தையும் ஜாதியையும் சேர்த்துக்கொள் கூட
மதம் கொண்டானா அவன்.
இல்லையெனில்
மீண்டும் ஒருமுறை புகட்டு

உற்றுப் பார்
மனிதம் அவனுள் அழிந்ததா என.
அவன் மூதாதையர்கள்
அடிபட்ட கதை சொல்.
அவன் இனம் அடிபட்ட இடம் சொல்.
வெறி கொண்டானா அவன்
இல்லையெனில்
மீண்டும் ஒரு முறை குடிக்க விடு.

ஏதேனும் ஒரு காரணத்தால்
அவனை எங்கும் சேர விடாதே
எதேனும் ஒரு போதையால்
அவனை சிந்திக்க விடாதே
ஏதேனும் ஒரு நிகழ்வால் 
ரத்தம் சிந்த விடு
எதேனும் ஒரு பெயரால்
கண்ணீர் துடை
ஏதேனும் ஒரு மாமிசத் துண்டால்
ஒற்றுமை உடை
ஏதேனும் ஒரு பலத்தால்
பயமுறுத்தி நில்
ஏதேனும் ஒரு கரத்தால்
காப்பது போல் நடி
ஏதேனும் சொல்லிக் கொண்டே இரு
அவனுக்கு புரியக் கூடாது
ஏதேனும் செய்து கொண்டே இரு
அவன் தூங்க கூடாது

இன்னும் கொஞ்சம் மதத்தினை ஊற்று
போதவில்லையெனில்
இனத்தையும் ஜாதியையும் சேர்த்துக்கொள்.

நமக்கு அவன் வேண்டும்
நாம் சொல்லியபடி கேட்கும் அவன் வேண்டும்

நாளை நமதே.


No comments:

Post a Comment