உனக்கான முத்தத்தை மட்டும்
நான் இன்றும் வைத்துள்ளேன்
என் இத்தனை முத்தங்களில்
உனக்கானது மட்டும் தனியாக உள்ளது
இத்தனை வருடங்களாகியும்
இன்னும் ஈரமாய் இருக்கிறது அது
ஈரம் காய்கின்ற தருணங்களில்
கொஞ்சமாய் என் ரத்தம் தெளிக்கிறேன்
என்றேனும் அதன் ஈரம் சுவைக்கையில்
உனக்கு கொஞ்சமாய்
ஒரு சிவப்பு நினைவுக்கு வரும்
அப்போது இந்த கவிதையை நினைத்துக்கொள்
No comments:
Post a Comment