வார்த்தைகள்
அர்த்தங்கள்
இழந்து
ஓசைகளாய்
மாறுகின்றன
இழப்பின்
கனத்தால்.
கனவுகள்
கூனிக்
குறுகி
கரைந்து
ஒழுகுகின்றன
கண்
முன்னால்.
சிரிப்பும்
சந்தோஷமும்
சவமாய்
கிடக்கின்றன
மௌனத்தின்
கிடங்குகளில்
காடு
அடர்ந்த பாதையும்
பயம்
அடர்ந்த மனதுமாய்
வாழ்க்கை
பயணம்.
நீண்ட
இருளின்
முற்றுப்புள்ளியாய்
எங்கேனும்
தெரியும்
ஓர்
வெளிச்சப் பொட்டு
மொட்டொன்று
பூப்பெய்தும்
நொடி
போல்
சட்டென்று
முடியும்
சில
காத்திருத்தல்கள்.
நம்பிக்கையில்
நகர்கின்றன
நாட்கள்.
No comments:
Post a Comment